தமிழ்ச்சமயம் மலர்கள்

தமிழ்ச்சமய பண்

இறைமையில் தமிழ்மை தமிழ்மையில் இறைமை,
இரண்டறக் கலந்த இயற்கையில் ஒருமை…

இறைமையில் சார்பவர் தமிழ்மையைக் காண்பார்,
தமிழ்மையில் சார்பவர் இறைமையைக் காண்பார்…

இறைமையும் தமிழ்மையும் இசைந்த மறைமை,
இறைமயம் செய்வதால் இசைமொழி தமிழ்…

நிறைமொழி மாந்தர் மெய்கண்டு ஆணையில்,
இறைமொழி மறைமொழி தமிழென் றாரே…

இறைமொழி மறைமொழி தமிழென் றாரே… தமிழ்

இறைமையில் தமிழ்மை தமிழ்மையில் இறைமை,
இரண்டறக் கலந்த இயற்கையில் ஒருமை…

இறைமையில் சார்பவர் தமிழ்மையைக் காண்பார்,
தமிழ்மையில் சார்பவர் இறைமையைக் காண்பார்…

இறைமையும் தமிழ்மையும் இசைந்த மறைமை,
இறைமயம் செய்வதால் இறைமொழி தமிழே..